நேற்று வரை நான் யாரோ?
என் பெயர் நாகேஸ்வர ராவ். சகமான உத்யோகத்தில், பெங்களூரில், குடும்ப சகிதம் குடியேரியிருக்கும் ஒரு நடு வயது இளைஞன். என் பெயரைக் கேட்டவுடன் பலரும் நினைப்பது, நான் ஆந்த்ராவைச் சேர்ந்தவன் என்று. ஆனால் என் பூர்வீகம் சுவையானது. முன்னோர்கள் கன்னடக்காரர்கள். கர்னாடகாவில், ஹாஸன் பகுதியைச் சேர்ந்தவர்கள். திப்பு ஸுல்தான் காலத்தில் அவன் படையெடுப்பிற்கு அஞ்சி தென்னிந்தியாவின் பல பாகங்களுக்குச் சிதறியோடினர் என்று கேள்வி.
என் தந்தை வழி முன்னோர்கள் கேரளாவிலும், தாய் வழி முன்னோர்கள் தமிழ்நாட்டிலும் குடி பெயர்ந்ததாக தகவல்.
ஆக, கன்னடத்தவனான நான், கேரள மற்றும் தமிழ் வேர்களுடன், சென்னையில் பிறந்து வளர்ந்த இந்தியன்.
அதுவும் பெருமைப் பட வேண்டிய விஷயம்தானே!